TamilsGuide

வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்-எச்சரிக்கை

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்சினைகள் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என்றும் அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதை தவிர்ப்பதோடு, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.

மேலும், செயற்கையான குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து இயற்கையான தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை பருக வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ப்பாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment