TamilsGuide

யாழில் பெருமளவான சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட களை நாசினிகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனம், களை நாசினிகள், பூச்சி நாசினிகளின் விற்பனை அதிகாித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாய இராசாயன கட்டுப்பாட்டு பிாிவினா் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆவரங்கால் பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்து சுமாா் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத களை நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வா்த்தக நிலையத்திற்கு சொந்தமான களஞ்சிய சாலையிலும் இருந்து பெருந்தொகையான கிருமி நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனை அடுத்து குறித்த வா்த்தக நிலைய உாிமையாளா் மீது விவசாய திணைக்களத்தினால் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கிருமி நாசினிகளால் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் மண் வளமும் உடனடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே விவசாயிகள் இவ்வாறான சட்டவிரோத களை நாசினிகள் தொடா்பாக அவதானமாக இருக்கவேண்டும் .

அத்துடன் சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் தொடா்பாக தகவல் அறிந்தால் விவசாய திணைக்களத்திற்கு தகவல் வழங்கவேண்டும் என மாவட்ட விவசாய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளா் அஞ்சனா ஸ்ரீரங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அதேவேளை சட்டவிரோத களை நாசினி வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment