TamilsGuide

தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்

நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

குருணாகல் – கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

கட்சி என்ற ரீதியில் தாங்கள் நாட்டுக்கு அபிவிருத்திகளைச் செய்துள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையைச் செயற்படுத்தியதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிவதாகவும்  நாமல் ராஜபக்ஷ தொிவித்தாா்.

அத்துடன், பிறிதொரு தரப்பினர் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர்  குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்றும், அவா்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவா் குற்றம் சமத்தியுள்ளாா்.

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுவதைப்பற்றி எந்த நாடும் பேசுவதில்லை எனவும்,  தமிழர்களைப் பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
 

Leave a comment

Comment