TamilsGuide

சீன எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்த கனடா அரசு

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார [எலெக்ட்ரிக்] வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலக சந்தையில் தங்களை நிலைநிறுத்தி லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

இதுதவிர்த்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சீன மின்சார வாகனங்களுக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிக வரி விதித்திருந்தன. தற்போது கனடாவில் இறக்குமதி ஆகும் சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment