TamilsGuide

அவசரத் தேவைகளுக்கு மட்டுமே கடவுச்சீட்டு - இலங்கை குடிவரவுத் துறையின் முக்கிய அறிவிப்பு 

வெற்று கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள கட்டுப்பாட்டாளர் நாயகம், விண்ணப்பதாரர்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய E-Passports விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

E-Passports அறிமுகப்படுத்தப்படும் வரையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், கூடுதலாக 50,000 தரநிலை கடவுச்சீட்டுகளுக்கு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவை அக்டோபர் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்றும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 23% மட்டுமே சர்வதேச பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு புதிய ஸ்டாக் வரும் வரை அத்தியாவசியமற்ற பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஒத்திவைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஏதேனும் அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதுடன், பிரச்சினையை உடனடியாக தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment