TamilsGuide

ஒரே மாதத்தில் குவிந்த ரூ.4,500 கோடி நிதி - கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு அமோக ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்காக கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

இதில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு தேர்தல் நிதி அளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு புதியவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் போட்டி போட்டு நிதி அளித்துள்ளனர்.

இதன் மூலம் கமலாஹாரிஸ் தனது பிரசாரத்தின் மூலம் பெரிய மற்றும் சிறிய நன்கொடையாளர்களை கவர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

Leave a comment

Comment