TamilsGuide

கனடிய வாடகை குடியிருப்பாளர்களுக்கான எச்சரிக்கை

கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு, முன்னணி வீட்டுமனை நிறுவனங்களில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு கனடாவைச் சேர்ந்த முன்னணி வீட்டு மனை நிறுவனம் ஒன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாடகை குடியிருப்பாளர்களின் தரவுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெயின் ஸ்ட்ரீட் ஈக்விட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நமது நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பிற்குள் மூன்றாம் தரப்பினர் உட்பிரவேசித்து உள்ளதனை கண்டறிந்து கொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனடியாக இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சில வேளைகளில் வாடகை குடியிருப்பாளர்களின் தரவுகள் களவாடப்பட்டு இருக்கலாம் என அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெயின் ஸ்ட்ரீட் நிறுவனம் சுமார் 17000 குடியிருப்பு தொகுதிகளை நிர்வாகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment