TamilsGuide

100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில்

கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00  மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது.

இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன.

இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக   திட்ட அபிவிருத்தி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா  மற்றும்   நாடாளுமன்ற உறுப்பினர்  மனோ கணேசன் கலந்து கொள்வதோடு கௌரவ அதிதிகளாக பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள் (கதிரேசன் கோவில் ) S. ராஜேந்திரன் அறங்காவலர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய மண்ணைச் சேர்ந்த  முனைவர் எஸ் யாசின் ஷரீப்  மனித உரிமைகள் கழகமும், மாநில துணை அமைப்பாளரும், (தெற்கு) திரு  ஈகை கா கருணாநிதி சென்னை தென் மாவட்ட பிரதிநிதி தி.மு.க முனைவர், கவிஞர். வீரை மைதீன் (திருநெல்வேலி) அவர்களும் வருகை தந்து சிறப்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment