TamilsGuide

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளும் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.ஏ.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அவர்கள் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கை வழங்க உள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை அவதானிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கை வந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் தேர்தல் செயல்முறைகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் அவர்கள் 2019 இல் நடைபெற்ற தேர்தலுடன் 6 சந்தர்ப்பங்களில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுடிருந்தனர்

இது தவிர, பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புக்காக வருகைதர உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment