TamilsGuide

அமெரிக்க மக்களின் கனவை இவர் நனவாக்குவார்! முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் 

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5-ம் திகதி நடைபெற உள்ளது.

இதன்படி, குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் துணை ஜனாபதிபதி வேட்பாளர் டிம் வால்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, 

"எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 78 வயது ஆனது. நான் டிரம்பு தொடர்பில் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பும் ஒரே ஒரு கருத்து என்னவென்றால், அவரை விட நான் இன்னும் இளமையாக இருக்கிறேன்.

தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் எப்போதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். கமலா ஹாரிஸ் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவர் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குவார். 

மிகுந்த அனுபவமும், நம்பிக்கையும், உற்சாகமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் குரலாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் உடையவர் ஆவார்." என அவர் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment