TamilsGuide

கனடாவில் ஸ்தம்பிக்கும் ரயில் சேவை

கனடாவில் சரக்கு ரயில் சேவைகள் ஸ்தம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் ரயில் சேவையில் பணியாற்றி வரும் சுமார் 9300 பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குறித்துள்ளனர்.

இதனால் கனடாவின் பிரதான ரயில் சேவைகள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

கனடிய தேசிய ரயில் சேவை மற்றும் கனடிய பசுபிக் கன்சாஸ் நகர ரயில் சேவை என்பனவற்றின் பணியாளர்கள் இவ்வாறு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நிறுவனங்களும் கூட்டாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களை போக்குவரத்து செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு ரயில் சேவை பணிபுரக்கணிப்பு பாரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் பொருட்களை போக்குவரத்து செய்வதில் ஸ்தம்பித நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தினால் விவசாயம், சுரங்க தொழில், சக்தி வளம், சில்லறை வியாபாரம் வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை போன்ற துறைகளுக்கு பாரியளவு தாக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகங்களில் இருந்து கொள்கலன்களை ஏற்றி செல்லும் நடவடிக்கையும் ஸ்தம்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் சுமார் 32000 ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. 

Leave a comment

Comment