TamilsGuide

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக தலதா பெரஹெரா அடையாளப்படுத்தப்படும்

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெராவை அடையாளப்படுத்த முழு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளியை எசல பெரஹெரா சிறப்பாக நிறைவுள்ளதாக அறிவிக்கும் பிரகடனம்  தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” உலகில் பல நாடுகளில் பெரஹெரா நிகழ்வுகள்  பல விதமாக நடத்தப்படுகின்றன. அவை ஒவ்வொரு மதங்களினதும் தனித்துவத்தை கொண்டதாக அமைந்துள்ளன.

அந்த வரிசையில் தலதா மாளிகைக்கு சிறப்பான இடமுண்டு. போகம்பர கட்டிடத்தின் வரலாற்று பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் ஹில்டன் நிறுவனத்துடன் கைரோத்துக்கொண்டு அதனை ஹோட்டலாக மாற்றியமைக்வுள்ளோம்.

கண்டி பழைய தபால் நிலையக் கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதுள்ள கண்டி நகர சந்தைக் கட்டிடத்தொகுதியை மறுசீரமைப்பதற்கான திட்டமும் உள்ளது.

ஜப்பானுடன் கலந்துரையாடி மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கட்டுகஸ்தோட்டை வரையில் நீடித்து பாரிய நகர கட்டமைப்பொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

பேராதனை பூங்காவை போன்றே உடவத்தகெலே பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக மதச் செயற்பாடுகளுடன் அந்த பிரதேசத்தை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மத்தியஸ்தானங்களாக மாற்றியமைக்க எதிர்பார்த்துள்ளோம்” இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment