TamilsGuide

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

2020 பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கருணாதாச கொடித்துவக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114,319 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment