TamilsGuide

மலையாள சினிமாவில் தலைவிரித்தாடும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை!! ஹேமா கமிஷன் கொடுத்த அதிர்ச்சி... 

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் ஹேமா கமிஷன் வெளியிட்டு புதிய அறிக்கையில் மலையாள சினிமா குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மலையாளத்தில் காஸ்டிங் கவுச், ஒரு பெரிய பிரச்சனையாகவே இருப்பதாகவும் பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாகவும் வேலை வேண்டும் என்றால் அதற்கு ஈடாக பாலியல் ரீதியான பிரச்சனையை தாங்கள் சந்திப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் இது சகஜமாக நடப்பதாகவும் கனவோடு வரும் பெண்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் கட்டாயப்படுத்துவதும் அதற்கு பெண்கள் சமரசம் செய்து படவாய்ப்பை பெற்றுவிடுகிறர்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சினிமாவை சேர்ந்த ஆண்கள் பெண் கலைஞர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு குடி போதையில் கதவுகளை தட்டுவடும் ஆண்கள் அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி பெண்களை பணியவைக்க பார்க்கின்றனர்.

இதுகுறித்து சினிமாவில் பல பெண்கள் இந்த மோசமான சம்பவத்தை சந்தித்தும் போலீசில் புகார் செய்ய தங்குகிறார்கள். ஏன் காவல்துறையை நாடவில்லை என்று கேட்டதற்கு சில பெண்கள், புகார் அளித்த பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் அச்சத்தின் காரணமாக வாய்த்திறக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment