TamilsGuide

மீண்டும் ஒரு முறை அவர் ஞாபகார்த்தமாக,யார்? இந்த பெரியார் தாசன்.

பலருக்கு தெரியாத விடையம்.1982 தொடக்கம்1986 வரை போராட்டம் விரிவடைந்திருந்த காலகட்டம் அது.சில ஈழவிடுதலை இயக்கங்களின் நுாற்றுக்கணக்கான போராளிகளுக்கு

அரசியல் படிப்பித்தவர் அரசியல் ஆசானாக திகழ்தவர் கடமை தவறாதவர் நேரம் தவறாதவர் அவரிடம் நாம் மாணக்கர்களாக இருந்த அந்தக்காலம் ஒரு பொற்காலம்............அதிபயங்கரமான ஞாபக சக்திகொண்டவர்.அந்த ஆசிரியர் இனி இல்லையென்பது ஏற்க முடியவில்லை..அவருக்கு எம் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு.அவரின் நினைவாக, அவரைப்பற்றி..

பேராசிரியர் பெரியார்தாசன் மரணம் -கண்கள், உடல் தானம் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் பெரியார்தாசன்.

பெரியார்தாசன்.

இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மரணமடையும்போது, அவருக்கு வயது 63.

அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும்,வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்.

இவர் மிகச் சிறந்த பெரியார் பக்தராக திகழ்ந்தவர் பெரியார்தாசன். இதன் காரணமாகவே தனது பெயரைக் கூட பெரியார்தாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

தீவிர நாத்திகர் பெரியார்தாசனாக அவர் வலம் வந்தபோது தீவிர நாத்திகனாக திகழ்ந்தார். மூடத்தனம், அறியாமை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். பகுத்தறிவை வளர்க்கப் பாடுபட்டவர்.

மாணவப் பருவத்திலேயே தீவிர பிரசாரம் மாணவராக இருந்தபோதே தீவிர பகுத்தறிவாளராக திகழ்ந்தவர் பெரியார்தாசன். பல்வேறு மதங்களின் கோட்பாடுகளையும் படித்துக் கரைத்தவர்.

சினிமாவிலும் நடித்துள்ளார் பெண் சிசுக் கொலைக்கு எதிரான கருத்தம்மா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார் பெரியார்தாசன். மேலும் சில படங்களிலும் பெரியார்தாசன் நடித்துள்ளார். 
 

Leave a comment

Comment