TamilsGuide

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டின் சாபக்கேடு

”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை  இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர்  இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் கூறியே சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தனர்.

ஆனால் அதற்கான எந்தநடவடிக்கையினையும் அவர் எடுக்கவில்லை.அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் பிரேரனையொன்றினையேனும் முன்வைகக அவர்களால் இயலவில்லை.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு மைத்ரி -ரணில் ஆட்சிக்கு வந்தபோதும் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பதாக கூறினர். அதனை செய்யவில்லை.

1977 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிற்கு சாபக்கேடாகவே நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுகின்றது. நாட்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கு 1000 மில்லியன் ரூபா செலவாகும்.

எனவே தேர்தல்களை பிற்போடுவதன் ஊடாக தேர்தல் செலவீனங்களே அதிகரித்து செல்கின்றன. இன்று இந்த நாட்டில் 4 தேர்தல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேட்பாளர் ஒருவரல் செலவிட வேண்டிய நிதி தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு வினவியிருந்தது. வாக்காளர் ஒருவருக்கு சாதாரணமாக 20 ரூபா செலவிட முடியும். அந்தவகையில் மொத்தமாக 36 கோடி ரூபாவை செலவிட முடியும் என நான் கூறினேன்.ஆனால் ஒரு சில வேட்பாளர்கள் வாக்காளர் ஒருவருக்க குறைந்த பட்சம் 300 ரூபா செலவிட வேண்டும் என கூறுகின்றனர்.

இந்த நாட்டில் ஒரு கோடியே எழுபது லட்சம் வாக்களார்கள் உள்ளனர். அவ்வாறாயின் 300 ரூபா அடிப்படையில் ஒரு கோடியே 70 லட்சம் வாக்களார்களுக்கு செலவாகும் நிதிதொகையினை மதிப்பீடு செய்ய வேண்டும். இது நியாயமற்ற கோரிக்கையாகும்.சுமார் 510 கோடி ரூபா செலவாகும் அதாவது 5 பில்லியன் ரூபா செலவாகும்.இது பாரிய மேசடியாகும்” இவ்வாறு ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment