TamilsGuide

2022 தேசிய விருது- சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குநராக ஜானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment