TamilsGuide

சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk

lk domain Registry 2024 ஆம் ஆண்டிற்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில் Vigo.lk இணையத்தளமும் விருது ஒன்றை தன்வசப்படுத்தியது.

Cinnamon Grand ஹொட்டலில் 14ஆம் திகதி (14.08.2024) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதன் நிறுவுநர் சபாநாயகம் விதுசகன் விருதினை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, Fashion and Lifestyle பிரிவில் இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளத்துக்கான விருது Vigo.lk இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவின் கீழ் பல இணையத்தளங்கள் போட்டியிட்ட போதும் முதலாம் கட்டமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் அதிக வாக்குகளை Vigo.lk பெற்றிருந்தது.

இதனையடுத்து, சுயாதீன நடுவர்களால் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டு அதில் அதிகபடியான புள்ளிகளை பெற்று Vigo.lk இணையம் மகுடம் சூடியது.

கிழக்கு மாகாண மட்டக்களப்பில் இருந்து நாடுபூராகவும் இயங்கும் ஓர் வியாபார இணையத்தளமானது இவ் விருதினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதினை பெற்றுக்கொண்ட Vigo.lk நிறுவுநர் விதுசகன் கருத்து தெரிவிக்கையில்” எமது இணையத்தளம் ஊடாக உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றோம். எமது Vigo.lk இணையத்தளத்தின் மூலம் நவீன விற்பனை செய்யும் அனைத்து ஆடைவகைகளும் எமது தனித்துவமான ஆடை வடிவமைப்பில் முழுவதுமாக தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.

மட்டக்களப்பை மையமாக கொண்டு இலங்கை மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் எமது சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தலைநகரில் எமது நிறுவனத்தின் காட்சியறையினைத் திறந்து வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

குறுகிய காலத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை மக்கள் தந்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த விருதே சான்றாகவுள்ளது. எமக்கு இந்த விருது கிடைப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவிய அனைத்து நல்உள்ளங்களுங்கும் நன்றி” என அவா் மேலும் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment