TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் - அச்சுப்பணிகள் நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்ப்பட்ட பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ள நிலையில் வாக்குச்சீட்டை வடிவமைப்பது தொடர்பாக அரசாங்க அச்சகர் கங்காணி லினகே கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே வாக்குச் சீட்டில் வாக்காளரின் பெயர்களும் அவர்களின் இலட்சினைகளும் அச்சிடப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒரே வாக்குச்சீட்டில் அச்சிடுவதா அல்லது இரண்டு வாக்குச்சீட்டுகளாக அச்சிடுவதா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் அறிவுரைகளுக்கு அமைய வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கட்டுப்பனம் செலுத்திய வேட்பாளர்களில் வேட்புமனு தாக்கல் செய்யாவிடின் சிலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வேட்பாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

35 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒரே வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை அச்சிடக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 

Leave a comment

Comment