TamilsGuide

விமான பயணத்தின்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழக்கங்கள் - வெளியான சுவாரசியமான தகவல்கள்  

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் விமான பயணத்தின்போது என்ன செய்வார் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்புக்கு சேவை செய்த முன்னாள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பணிப்பெண்ணான எலிசபெத் இவான்ஸ் (), விமான பயணத்தின்போது அவர்களது பழக்கவழக்கம் குறித்த கவர்ச்சிகரமான நுண் குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.

இவான்ஸின் சேகரிப்பு ஏலத்திற்கு செல்லும்போது, அவரது குறிப்புகள் மறைந்த ராணியின் பயண நடைமுறைகளைப் பற்றிய ஒரு அரிய தகவல்களை வழங்குகின்றன.

1989-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான பிரிட்டிஷ் ஏர்வேஸ் ராயல் விமான பயணத்தின்போது, இவான்ஸ் ராணிக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அவரது குறிப்புகளின்படி, ராணி பறக்கும் போது சில குறிப்பிட்ட விருப்பங்களைக் கொண்டிருந்தார்.

நடுவானில் விருந்தினர்களை சந்திப்பதற்கு முன்பு, ராணி பெரும்பாலும் ஒரு மார்டினியை (Martini) அருந்துவார் என இவான்ஸ் தனது குறிப்பில் வியப்புடன் எழுதியுள்ளார்.

ராணியின் பயணங்களின் போது அவருக்கு தேவையான வசதி பிரதானமாக இருந்தது. ஒரு நல்ல இரவு தூக்கத்தை உறுதி செய்வதற்காக அவர் தனது தலையணைகளை விமானத்தில் கொண்டு வருவார் என குறிப்பிட்டுள்ளார்.

ராணி Velamints மீது ஒரு விருப்பம் கொண்டிருந்தார் என்பதையும் எவன்ஸ் வெளிப்படுத்தினார், புறப்படுவதற்கு முன்பு மற்றும் அவரது உடை மாற்றும் அறையில் Velamints-ஐ கையில் வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொள்வார் என்று எவான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் தரையிறங்கும்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தால், அவர் இயற்கையாக எழுந்திருக்கும் வரை விமானப் பணியாளர்கள் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

2017-ஆம் ஆண்டில் தனது 70 வயதில் காலமான எலிசபெத் எவன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸில் 28 வருட புகழ்பெற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்தார், இதன் போது அவர் உலகின் முதல் வணிக சூப்பர்சோனிக் விமானமான கான்கார்டில் பல பிரபலங்களுக்கு சேவை செய்தார்.

ராயல் விமானத்தில் அவரது சேவையை நினைவுகூரும் வகையில், அவருக்கு ஒரு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது, இது ஏலம் விடப்படவுள்ள நினைவுப் பொருட்களின் ஒரு பகுதியாகும் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

விற்பனையைக் கையாளும் ஏல நிறுவனமான Hansons Auctioneers, எவான்ஸின் சேகரிப்பின் மதிப்பு $500 முதல் $760 வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறது.

இந்த ஏலம் அரச வரலாற்றின் ஒரு பகுதியை சொந்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பையும், உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது. 
 

Leave a comment

Comment