TamilsGuide

எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்

”எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்” என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இது குறித்து ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது“  நாட்டில் தீர்மானமிக்க தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. நெருக்கடியில் வீழ்ச்சியடைந்த நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.

எனவே நாடு மீண்டும் வீழ்ச்சியடையாதிருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்த நாட்டை
தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும். சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தினை நிர்வகிக்க உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பொறிமுறைகளின் கீழ் செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படும் பட்சத்திலேயே மீண்டும் ஒரு வங்குரோத்து நிலை ஏற்படுவதிலிருந்து தவிர்க்க முடியும்.எனவே நடைபெறவுள்ள தேர்தலானது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்.எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச்செய்வதற்காக மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

நாட்டில் ஆட்சியமைக்கும் கனவில் உள்ள பலர் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தி;ல் தீர்மானங்களை எடுக்க தவறினர். சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் இயலாமை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment