TamilsGuide

The GOAT திரைப்படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகிறது

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கோட் திரைப்படம் குறித்து தினமும் ஒரு ஒரு அப்டேடுகளாக வந்த வண்ணம் உள்ளது. திரைப்பட, ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. தற்பொழுது படத்தின் டிரைலரை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

அதில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, படத்தின் மிக பிரமாண்டமான டிரைலர் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். படத்தின் டிரைலர் குறித்து நாளை அப்டேட் வரும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் டிரைலர் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
 

Leave a comment

Comment