TamilsGuide

முடிந்தது ஒலிம்பிக்ஸ்.. அந்தரத்தில் அரசியல் சூழல் - அதிபர் மேக்ரானுக்கு காத்திருக்கும் சவால்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்று இரவுதான் முடிவடைந்தது. நேற்றைய இரவு விழா நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தேகத்துக்கிடமான வகையில் ஈபிள் கோபுரத்தில் ஏறி அதை அளவெடுத்துக் கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டை அணியாத அவர் கோபுரத்தில் ஏறி அளவெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போலீசார் கவனத்துக்கு வந்தததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிச்சத்துக்கு வராத சதி

முன்னதாக ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின்போது மெட்ரோ வழித்தடங்களைத் துண்டித்து மர்ம நபர்கள் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர்.அதன்பின் நெட்ஒர்க் கேபிள்களை துண்டித்து தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினார். பிரான்சில் சமீபத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற அசாதாரண சூழ்நிலை எழுந்தது.

பிரான்ஸ் அரசியலில் அடுத்தது என்ன?

ஆனால் ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முடிவு செய்தார். பிரதமர் கேபிரியல் அட்டல் கொடுத்த ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்தார். இந்நிலையில் தற்போது ஒலிம்பிக்ஸ் முடிவடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைய உள்ள புதிய அரசின் நிலைப்பாடும், ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் அதன் தாக்கமும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
 

Leave a comment

Comment