TamilsGuide

பத்மினி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். 

பத்மினி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழ மொழிகளில் நடித்துள்ளார். கன்னிகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பின் மாயாவதி, மருமகள், இல்லற ஜோதி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆடல் மற்றும் நடிப்பு என இரு கலைகளிலும் கைதேர்ந்தவர் இவர். அக்காலத்தில் இப்படியொரு திறமையை பார்ப்பது கடினம். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் மோகனாம்பாள் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பினை மிக சிறப்பாக வெளிக்காட்டினார். இப்படத்தில் இவரது ஆடல் மற்றும் நடிப்பு இரண்டும் சேர்ந்து இவருக்கென தனி பெயரையே பெற்று தந்தது.

திரையில் கோலாகலமாய் ஜொலித்த பத்மினி 1961ஆம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவிற்கு வரவிரும்பி தனது கணவரிடம் கேட்க அவரும் ஒப்புகொண்டார்.

அவ்வாறு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த படம்தான் 1963ஆம் ஆண்டு வெளியான காட்டு ரோஜா. இப்படத்தினை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க இயக்குனர் சுப்பாராவ் இயக்கினார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பாடலாசிரியர் கண்ணதாசன் பாடல் அமைத்திருந்தார்.

பத்மினி சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் அவரை போன்ற திறமையுடன் புகழ்பெற்ற நடிகை ஒருவர் இருந்தார். அவர் தனக்கு பத்மினி போன்ற திறமை இல்லாதவர்கள் போட்டியாக இல்லாத காரணத்தினால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் சற்று திமிராக நடந்து கொண்டுள்ளார். பின் பத்மினி இப்படத்தின் மூலம் திரும்ப வர இயக்குனர் பத்மினியை வரவேற்க்கும் விதத்தில் பாடல்களை எழுதி தருமாறு கண்ணதாசனிடம் கேட்டுள்ளார்.

மேலும் இதுவரை பத்மினி இல்லாததால் ஆணவத்தில் இருந்த அந்த நடிகைக்கு நாம் திரும்பி வந்துவிட்டேன் என பத்மினி கூறும்படி அப்பாடல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு கண்ணதாசன் ”ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ…அன்று போனவள் இன்று வந்துவிட்டாள் என்று புன்னகை செய்தாயோ…” என பாடலை உருவாக்கியுள்ளார்.

மேலும் இப்பாடலில் அந்த நடிகைக்கு சவால் விடும் வகையில் ”ரத்தின கம்பளமே அட முத்திரி மோதரமே…நீ நாளை பொழுத்துக்குள் வாடிவிழுந்திடும் மாய கதையடியோ… நான் சித்திர பெண்மையடி… இது தெய்வ பருவமடி…எந்தனை காலங்கள் மாறியபோதும் என்றும் இளமையடி…”என குறிப்பிட்டிருந்தார். அதாவது உன்புகழ் இன்று இருக்கலாம். 

ஆனால் நாளை இருக்குமா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் நான் அவ்வாறு இல்லை என்றும் நான் இளமைதான் என்னை மிஞ்ச ஆள் இல்லை என்பது பொருள்.   இப்படி சூல்நிலைக்கு ஏற்றாற் போல் பாடல்களை உருவாக்குவதில் கண்ணதாசன் கெட்டிகாரர் என்பது நாம் அறிந்ததே.
 

Leave a comment

Comment