TamilsGuide

கண்டி பிரதான வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வேவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment