TamilsGuide

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது எனவும் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விண்ணப்பங்களை வழங்காதவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால எல்லையும் நிறைவடையும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, 15 ஆம் திகதி காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று, தேர்தல் பிரச்சினைகளை தீர்க்கும் மையங்கள் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு பொலிஸார் தமது ஆதரவை வழங்கியுள்ளதுடன், குறித்த மையங்கள் தொடர்பான தொலைபேசி இலக்கங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை அனைத்து அரச நிறுவனங்களும் பின்பற்றுவது மிகவும் முக்கியம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
 

Leave a comment

Comment