TamilsGuide

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று பத்தரமுல்ல பெலவத்த ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றதுள்ளது

இங்கு இலங்கை வைத்தியர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்குரிய நிலைமை மற்றும் நிலைமையை மாற்றுவதற்கான சங்கத்தின் முன்மொழிவுகள் தேசிய மக்கள் சக்தியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது

இதில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சஞ்சீவ தென்னகோன் உட்பட நிறைவேற்று சபை அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment