TamilsGuide

ஒரே தாயின் கையால் உண்டு வளர்ந்தோம்

21.11.1983 சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற
எம்.ஜி.ஆருக்கு, டைரக்டர் பாரதிராஜா தலைமையில் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த பாராட்டு விழாவில்...
மக்கள் திலகம் பேசியது...
'ஒரே தாயின் கையால் உண்டு
வளர்ந்தோம்' என்று சிவாஜி

கூறினார். என் தாய் எங்கள் இருவருக்கும், அதேபோல்
சிவாஜியின் தாய் எங்கள் இருவருக்கும் உணவைப் பரிமாறி இருக்கிறார்கள்.
'என் மறைந்த மனைவியின்
மரணத்தின்போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். அப்போது என் வீட்டிற்கு வந்த
சிவாஜியைப் பார்த்துத்தான் கதறி அழுதேன். மனிதனுக்கு துன்பம் நேரும்போது நண்பன் சகோதரனாகிறான். சிவாஜியைப் பார்த்ததும் பொங்கி வந்த துக்கத்தை அடக்க முடியாமல் பீறிட்டு அழுதுவிட்டேன்.'
'பாழாய்ப்போன அரசியல் நம்மைப் பிரித்து விட்டதே: என்று சிவாஜி சொன்னார். 
அண்ணன் தம்பி உறவைப்
பிரிக்க முடியாது...எப்போதாவது ஒன்று
சேருவோம். அது எதற்காக? என்று எனக்குத் தெரியாது. 
மக்களுக்கு ஒழுங்கு, ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுங்கள்.
நகைச்சுவையோடு பொழுது போக்காகப் படம் எடுங்கள்.
நடிக்கும்போது பொதுவாக ஒரு கொள்கையோடு கலைஞன் நடிக்க வேண்டும்.
படம் பார்த்து தியேட்டரை விட்டு மக்கள் செல்லும் போது புதிய பாடம் கற்க வேண்டும் என்று, அன்று சொன்னவர் அண்ணா.
 

 

Leave a comment

Comment