TamilsGuide

சர்தார் 2 படத்தில் இணையும் ஆஷிகா ரங்கநாத்

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இடையே படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சி கலைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி காலமானார். இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் படக்குழு கொடுத்த தகவல்படி இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

தற்பொழுது நடிகை ஆஷிகா ரங்கநாத் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆஷிகா ரங்கநாத் கன்னட திரைப்படமான க்ரேசி பாய் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார். பின் பல கன்னட திரைப்படங்களில் நடித்து. 2022 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். சித்தார்த் நடிப்பில் வெளிவர இருக்கும் மிஸ் யூ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment