TamilsGuide

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

நாட்டில், தற்போது நிலவும் இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த மூன்று மாதங்களில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17, திகதி சிறப்பு வர்த்தமானியின்படி, இஞ்சி இறக்குமதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு பாவனைக்கான உலர் இஞ்சியின் வருடாந்தத் தேவை 5,167 மெற்றிக் தொன் என விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இஞ்சியின் அளவு வருடாந்தம் 19,375 மெட்ரிக் தொன்கள் எனவும், தொடர்ந்து இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தையில் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் ஒரு கிலோ இஞ்சியின் விலை 5,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment