TamilsGuide

கடந்தகால நெருக்கடியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் – வஜிர

ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டங்கள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தொிவித்துள்ளாா்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

“2022 ஆம் ஆண்டு இந்த நாடு எதிர்நோக்கிய நெருக்கடியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பின்விளைவுகளை மக்களே சுமக்க வேண்டி ஏற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்று 2 வருடங்களில் மக்கள் எதிர்கொண்ட சுமைகளில் இருந்து அவர்களை விடுவித்துள்ளார்.

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டங்கள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.

ஆனால் நாடு சுமூக நிலையை அடைந்துள்ளது. இந்த நாட்டில் 4 ஆவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு அரசியல் பிரதிநிதிகள் பலர் வழிவகை செய்கின்றனர்.

எனவே ஜனாதிபதி இந்த நாட்டில் தொடர்ந்தும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும்.

சவாலுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி இன்று உலக நாடுகளின் வரவேற்பையும் பெற்றுள்ளார்” என அவா் மேலும் தொிவித்துள்ளாா்.
 

Leave a comment

Comment