TamilsGuide

உலகம் சுற்றும் வாலிபன்

எக்ஸ்போ 70 முடிவடைய ஒரே வாரம் இருந்தது. எம்ஜிஆர் முதலில் லொகேஷன் பார்க்கவோ, அல்லது சும்மாவோ எக்ஸ்போவுக்கு சென்றபோது, அங்கே ஹரி என்ற காமரா மேனை எதேச்சையாக பார்த்தவுடன்  வாத்தியார் மூளை துரிதமாக்  கணக்கு போட்டது.  
அப்போதெல்லாம் ஒவ்வொரு இயக்குநருக்கு, ஒவ்வொரு நிரந்தர ஒளிப்பதிவாளர் இருப்பார். 
ஏபி நாகராஜனுக்கு W.R. subbarao, தேவர் ஃபிலிம்சுக்கு சுந்தர பாபு,
பாலச்சந்தருக்கு லோகநாதன், ரகுநாதரெட்டி. ஸ்ரீதருக்கு பிஎன் சுந்தரம்
 வின்செண்ட் கே.எஸ் கோபால கிருஷ்ணனுக்கு சம்பத்.( சிலபடங்கள்
கர்ணன்) ஜெமினி வாசனுக்கு
 நல்லப்பா, பாரதி ராஜாவுக்கு நிவாஸ் , கண்ணன், விட்டலாச்சார்யாவுக்கு
H.S.வேணு, அதுபோல B.S.ரங்காவுக்கு ( நிச்சய தாம்பூலம்) ஒளிப்பதிவாளர் ஹரி.     
படப்பிடிப்புக்காக மிச்சல், ஏறி( ரி) என்ற இரண்டு வகைகாமராக்களைக் கொண்டு சென்றிருந்தார். 
ஹரியை சம்மதிக்க வைத்தால் துரிதமாக படமெடுக்க வசதியாக  அவரையும் ஒளிப்பதிவாளராக ஆக்கிக்கொண்டால் சுலபமாக படப்பிடிப்பு முடியும் என்று  நினைத்தார்.
அதற்குள் மணியன் 
பத்திரிகையாளர் பாஸ் வாங்கிக் கொண்டு வந்தார்.  அந்தபாஸ் இருந்தால் V .V. I. P . போகும் வழியில் எந்த அரங்கத்தினுள்ளும் எளிதாகப் போய் வரலாம். அது இல்லா விட்டால் ஒவ்வொரு அரங்கிலும் க்யூவில் நின்றுதான் உள்ளே போக வேண்டும்.  நேர விரயம்.  
மணியனிடம் தயங்கியபடியே வாத்தியார் "நீங்க பத்திரிகையாளர். சுலபமாக போயிடுவீங்க.  அப்ப நான் என்ன ஆகறது? "  மணியன் கமுக்கச் சிரிப்பு சிரித்து,  நீங்கதான் 'சமநீதி' பத்திரிகையின் சிறப்பாசிரியராய் இருந்தீர்களே? விகடனில், 'நான் ஏன் பிறந்தேன்?' கட்டுரை எழுதும் எழுத்தாளர், இந்தாங்க உங்க பாஸ்". வாத்தியார் மணியனை உச்சிமுகர்ந்து கட்டித் தீர்த்து விட்டார்.    
மஞ்சுளாவும் ,எம்ஜிஆரும், அசோகனிடமிருந்து இரவு விளக்குகளில் தப்பித்துச்செல்லும் அருமையான காட்சியைப் பார்த்திருப்பீர்கள். நாம் எம்ஜிஆரைப் பார்ப்பதா, பின்னணியில் இருந்த ரஷ்ய அரங்கு விஷயங்களைப் பார்ப்பதா, பின்னணி இசையை கவனிப்பதா, ஒளிரும் வண்ண வண்ண விளக்கு களின் நடனத்தை கவனிப்பதா, நடு நடுவே இருளில் ஓடுவது யார் யார் என்று யோசிப்பதா, என்று தெரியாத நிலையிலிருப்போம்.       

அந்தக் காட்சி எடுக்க வாத்தியார் என்ன பாடு பட்டிருப்பார்?   திசை தெரியாது இலக்கில்லாமல் மஞ்சுளாவுடன் ஓடும் எம்ஜிஆர், பின்னால் துரத்தும் அசோகன், அதன் பின்னால் ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவு மின்னல் போல விட்டு விட்டு அடிக்கும் விளக்கொளி ....ஓடுவது எம்ஜிஆரும் மஞ்சுளாவும்தான் என்று படம் பார்ப்பவர்களுக்கு தெளிவு படுத்த வேணுமானால் அவர்கள் முகத்தில் விளக்கடிக்க வேண்டும் அப்படி அடித்தால் காட்சி யின் அமைப்பின் தரம் இளிக்கும்.... காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்தால் யார் ஓடுகிறார்கள் யார் துரத்துகிறார்கள் என்று புரிய வைக்க முடியாது. இயக்குநர் எம்ஜிஆர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்? 
இயக்குநரே நடிகராயிருப்பதிலும், நடிகரே இயக்குநராயிருப்பதிலும், ஒரே ஒரு வசதிதான்.  நடிக்கும்போது காமரா ஓட ஆரம்பித்தபின்  இயக்குநர் கடைசி நேர முகபாவமோ வசனமோ  நடிகரிடம் சொல்ல வேண்டியிருந்தால் அதை அவரே செய்து மெருகேற்றலாம்.  இதைத்தவிர மற்றது எல்லாமே சிரமம்தான்.  மற்றவர்களை 
இயக்குவதை சுலபமாக செய்து விடலாம். ஆனால் அவர் நடிக்கும் போர்ஷனில் அவருக்கு பதில் அந்த இடத்தில் வேறு ஒருவரை வைத்து, ஒரு கணக்குக்கு வந்து, அந்த இடத்தில் இவர் வந்து இன்னொருவரை இயக்கினால் அந்தக்காட்சி இப்படி இருக்கும் என்று தீர்மானித்து , மனக் கண் முன் கொண்டு வந்து அதில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடிக்க வேண்டும்.     
இதில் எம்ஜிஆருக்கு ரெட்டைத் தலைவலி. மனநிலை சரியில்லாத எம்ஜிஆரும் ,மஞ்சுளாவும் எக்ஸ்போ
 வில்  நுழைந்து தப்பித்துக்...காணாமல் போக அவர்களைத்தேடியும் அவர்களைக் கண்டு பிடிக்கவும் வேறு நடிகர் அன்றி, அதே எம்ஜிஆரும், சந்திரகலாவும் எக்ஸ்போவின் இன்னொரு பகுதியில் தேடிவரும் பரபரப்பான காட்சியை யோசியுங்கள்.  இவ்வளவு ப்ரம்மாண்ட காட்சியை எடுக்கப் பணம் போடும் தயாரிப் பாளர், எம்ஜிஆர்/ இந்தப் பரபரப்புக்காட்சியை இயக்குவது எம்ஜி ஆர், /மஞ்சுளாவுடன் இலக்கில்லாமல் ஓடும் மனநிலையில், இல்லாத தாடிவைத்து, தொப்பி போட்ட எம்ஜிஆர்/ ,இவர்களைத் தேடும் சந்திரகலாவுடன் க்ளீன் ஷேவில் வேறு காஸ்ட்யூமில் எம்ஜிஆர்..... இருக்கும் நேரத்திற்குள் உடை மாற்ற வேண்டும்.. (அவ்வளவு பரபரப்புக்கண்காட்சியில் எந்த இடத்தில் உடை மாற்றமுடியும்? ), மேக்கப் மாற்ற வேண்டும். இருக்கும் ஒரு வாரத்துக்குள் இரவில் எக்ஸ்போ, பகலில் எக்ஸ்போ, என்றுபடமெடுக்க ப்ளான் பண்ண வேண்டும்...      
YOU ARE VERY GREAT VAAADHIYAARE!!!

 

Saptharishi Lasara

Leave a comment

Comment