TamilsGuide

தமிழ்த் தரப்பினாிடம் அபிவிருத்தி குறித்து தீா்வுகள் இல்லை – ஜனாதிபதி ரணில் விசனம்

அதிகாரபரவலாக்கம்  குறித்தும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும்  கேள்வி எழுப்பும் தரப்பினாிடம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தீா்வுத்திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளாா்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.

13 ஆம் திருத்தம் தொடர்பாகவும்  அதிகாரப் பரவலாக்கல்  குறித்தும் பலர் என்னிடம் வினவியிருந்தனர் நான் இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன்.

இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அனைவரினதும் நிலைப்பாடு என்ன? நான் அரசியலமைப்பில் உள்ள விடயங்களையம் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருந்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாா்.

அத்துடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும் எனவும், எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தொிவித்தாா்.

வடக்கில்  உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் தெற்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை எனவும், அவா்களுக்கான சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டினை வளா்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a comment

Comment