TamilsGuide

கவர்ச்சி தாரகை அனுராதா

இயற்பெயர் சுலோச்சனா. 1963ல் கிருஷ்ணகுமார்- சரோஜா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். அப்பா நடன கலைஞர்.அம்மா சிகை அலங்காரி.

இளம் வயதிலேயே நடனம், தற்காப்பு கலை கற்று தேர்ந்து. ஜாவா, புல்லட் இரு சக்கர வாகனங்களை அநாயாசமாக ஓட்டுவார். இதனால் திரைப்படங்களில் எந்த டூப்பும் இல்லாமல் இவரே காட்சிகளில் நடித்தார்.

கவர்ச்சி ஆட்டக்காரராகவும் பின்னாளில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லிக் கதாபாத்திரங்களிலும் தமிழ்,கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தவர்.

1980களில் தமிழ் சினிமாக்களில் இடைவேளைக்குப்பிறகு ஒரு கவர்ச்சியாக ஒரு  பாடல் இடம்பெறுவது பாணியாக இருந்து வந்தது. அப்போது #ஜெயமாலினி, அனுராதா, #டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள்தான் அந்தபாடல்களில்  கவர்ச்சியாக காஸ்டியூம்களை அணிந்து கொண்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் குத்தாட்டம் போட்டு வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் மேற்படி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு கரையேறிய பிறகு இப்போது அந்தப் பணியைக் கதாநாயகிகளே செவ்வனே செய்து வருகிறார்கள். இதில், அனுராதா திருமணத்திற்குப் பிறகு வில்லித்தனமான ரோல்களில் நடிப்பையும் தொடர்ந்து வந்தார்.

தற்போது டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

Udhayendiran Annachi

Leave a comment

Comment