TamilsGuide

சிவாஜி ஒரு பாடலை இரண்டு முறை கேட்டவுடன் அதற்கு ஏற்றது போல நடிக்க அரங்குக்கு வந்து விடுவார். ஆனால்..

சிவாஜி ஒரு பாடலை இரண்டு முறை கேட்டவுடன் அதற்கு ஏற்றது போல நடிக்க அரங்குக்கு வந்து விடுவார். ஆனால் ஒரு பாடலை 11 முறை கேட்டும் அவரால் நடிக்க முடியவில்லை
'கௌரவம்' படத்திற்காக அவர் பாடிய அந்தப் பாடல்.
 'நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...'
 11 தடவைக்கும் மேல் ஆழ்ந்து கேட்ட சிவாஜி..... இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம்
'சுந்தரா...
கொஞ்சம் டைம் கொடு. சூட்டிங்கை அப்புறம் வச்சிக்கலாம்னு சொல்ல,
டைரக்டர் ஒரே பதற்றம்...
ஏதும் பிரச்சனையா...'ன்னு கேட்டாராம்.
அதற்கு சிவாஜி,
'இல்லை சுந்தரா...
இந்தப் பாடலுக்கு டிஎம்எஸ் அண்ணா எனக்கு ஒரு சவால் விட்டுள்ளார்.
அவரே நடிகருக்கான வேலை அத்தனையையும் குரலில் செய்து விட்டார்.  அப்படி என்றால் நான் எப்படி நடிக்க வேண்டும்?
பாடலின் பல்லவியை ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், இன்னொரு இடத்தில் வேறு மாதிரி உணர்ச்சிகளுடனும் பாடி அசத்தியுள்ளார்.
பல்லவியில் ஒருவித பாவம், ஆக்ரோஷம்...

சரணத்தில் வேறு விதமான தொனி என பல பரிமாணங்களைப் பாடலில் கொண்டு வந்துள்ளார். நான் இன்னும் அதிகமாக இந்தப் பாடலுக்கு மெனக்கிட வேண்டும். அதனால் எனக்கு ரெஸ்ட் தேவை. அப்புறமா நடித்துக் காட்டுகிறேன்' என்றாராம்.

Leave a comment

Comment