TamilsGuide

விண்வெளியில் 50 நாட்களுக்கு மேலாக சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஜூன் மாதம் 5-ம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அவர்களது ஒரு வார கால விண்வெளி பயணம் தற்போது சுமார் 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் அவர்கள் விண்வெளிக்கு பயணித்த போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்றவற்றுக்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் நாசா இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக நியூ மெக்சிக்கோவில் பொறியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் த்ரஸ்டர்களுக்குள் அதிக வெப்பம் ஏற்படுவது சிக்கலுக்கு காரணம் என அறிந்துள்ளனர்.

மேலும், பூமிக்கு திரும்பும் போது ஸ்டார்லைனரை கைமுறையாக கட்டுப்பாடுத்துவது தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை விஞ்ஞானிகள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
 

Leave a comment

Comment