TamilsGuide

மாலினி பொன்சேகா (75)

"இலங்கை சினிமாவின் ராணி" என்று கருதப்படுகிற மாலினி பொன்சேகா 1969 தேசிய மாநில நாடக விழாவில் 'சிறந்த நடிகை விருதை' வென்ற வேளையில் பரவலாக அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து 1980 ல் சிறந்த நடிகைக்கான விருதுகளைப் பெற்றார்.

அது ஒரு பக்கம் இவர் புகழோடு விருதுகளோடும் இருந்தாலும் நாம் மகிழும்படியான ஒரு விஷயம் தான் இவர் நமது நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்ததுதான்

வரலாற்றில் முதல் இந்திய-#இலங்கை கூட்டுத் தயாரிப்பான இந்த பைலட் பிரேம்நாத் " முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது, அதே சமயம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இந்தியாவில் நடந்தன. இது 30 அக்டோபர் 1978 இல் வெளியிடப்பட்டது.

மாலினி இதை நினைவு கூறும்போது "தமிழ்த் திரையுலகிடமிருந்துதான் நாங்கள் நிறையப் பெற்றுள்ளோம், கற்றுள்ளோம்.இரு திரையுலகினரும் நல்ல நட்புடன் இருந்து வருபவர்கள். அது தொடர வேண்டும் என விரும்புகிறோம். #நடிகர்_திலகம்_ சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்த நாட்களை இன்னும் நான் நினைவில் வைத்துள்ளோம். அப்படத்தில் #ஸ்ரீதேவி எனது மகளாக நடித்திருந்தார். சிவாஜி கணேசன் எனது கணவராக நடித்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு மதித்து பழகினோம் ".
 

Leave a comment

Comment