TamilsGuide

உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன்  படத்திற்கு இசை குன்னக்குடி இல்லை, விசுதான் என்று தெரிந்தபின் அதற்கான 
மெனக்கெடலை, எம்ஜிஆரும்,  விஸ்வனாதனும், மெனக்கிட்டது சொல்லில் அடங்காது. 
நூற்றுக் கணக்கான...., நிஜமாகவே நூற்றுக் கணக்கான ட்யூன்களை போட்டுப்  போட்டு அலுத்துப்போய் அல்ல.........., அலுக்காமல் போய் வாத்தியாரிடம் காட்ட ,  இது ட்யூனாய் இருக்கும்போது இருந்த மாதிரி, பாட்டு ஆன போது இல்லையே,  இன்னும் வேற மாதிரி இருந்தால் நல்லாயிருக்கும். 
இன்னும் வேற மாதிரி..., இன்னும் இன்னும் ......என்று வாட்டி எடுத்து நூறுக்குமேல் ட்யூன் வாங்கி பத்து பனிரெண்டு தேர்வு செய்தார்.  
    விசுவுக்கு எம்ஜிஆரிடமிருந்து ஃபோன்  " நாளை படப் பிடிப்புக்கு சிங்கப்பூர், மலேஷியா 
கிளம்பறோம்"  
(லாசராவின் ' த்வனி'  கதை (40பக்கங்கள்) படித்து விட்டு அதன் வார்த்தைகளில் ப்ரமித்து கேட்டேன் "எல்லா வார்த்தைகளையும் இந்தக் கதையிலேயே போட்டுட்டேன்னா அடுத்தக் கதைக்கு வார்த்தைக்கு என்ன பண்ணுவேப்பா?"                   "ஏண்டா உலகத்துல 600 கோடி பேர் மூச்சு விட்டு ண்டிருக்கா, புதுசு புதுசா பொறந்துண்டே தான் இருக்கா காத்து தீர்ந்தா போச்சு?         அதுமாதிரி அடுத்தகதை வரும்போது அதுக்கேத்த வார்த்தை வந்த படியேதான் இருக்கும் " ,      என்றது போல..)
எம்ஜிஆர் விசுவை சீண்டினார், 
" என்ன விசு ..?அடுத்த படத்துக்கு 
விசு கிட்ட ஏதாவது  ட்யூன் ஸ்டாக் இருக்குமான்னு என்னை 
எல்லாரும் கேக்கறாங்க , அந்த அளவுக்கு இந்தப் படத்துக்கு பாட்டெல்லாம் அவ்ளோ நல்லாப் போட்டிருக்கையாமே? "        
"ஏண்ணே, மத்தவங்க கேக்கறாங்களா?  அப்ப உங்களுக்குப் பிடிக்கலைன்னு தானே அர்த்தம் இந்தப்படத்துக்கு உங்களுக்கு திருப்தி இல்லாம  பணமே வேண்டாம்ண்ணே"       
"இல்லை .நீ உன்னால முடிஞ்ச அதிகபட்ச உழைப்பையும் அதற்கான பலனையும் கொடுத்திருக்கே "  என்று சொல்லி விஸ்வனாதனே எதிர்பாராத உயர்ந்தபட்ச தொகையை கொடுத்தாராம்.          
'பன்ஸாயி' பாட்டையும் உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம் ... பாடல்களை  அந்த காலத்தில் அவரால் முடிந்த அளவு அதிகபட்ச தொழில் நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்து உயர் ரக டேப் ரெக்கார்டரில் எம்ஜிஆருக்கு 
போட்டுக் காண்பித்து எம்ஜிஆரின் முகத்தில் அகம் தெரிந்து திடுக்கிட்டார். 
எம்ஜிஆர் கண் காண்பித்ததும் ஒருவர் BED TYPE TAPE RECORDER கொண்டு வந்து வைத்தார். அதில் போட்டு முழுப்பாடல்களையும் கேட்டு "ரொம்ப நல்லாயிருக்கு விசு நல்லா ஹிட் ஆகும்" என்க ........                                  "என்னண்ணே அவ்ளோ கஷ்டப்பட்டு காஸ்ட்லி ரிகார்டர்ல போட்டுக் காண்பிச்சதை விட்டுட்டு டப்பா டைப்ல கேட்டுட்டு ஓகே சொல்றீங்களே"         
"விசு  நம்ம படம் பாக்கறவங்க, பாட்டு கேக்கறவங்க,  எல்லாருமே ரொம்ப  சாதாரணமானவங்க. பொருளாதார வசதி குறைவாக இருக்கறவங்க.  அவங்களால இந்த உயர் ரக டேப் ரெகார்டரெல்லாம் வாங்க முடியாது.  சாதாரண வீடுகள் டீக்கடைகள், மற்ற இடங்களில் எல்லாரிடமும், இந்த டைப் தான் இருக்கும். இதில் கேக்கறத்துக்கு பாட்டு நல்லாயிருந்தாத்தானே அவங்க சந்தோஷப்படமுடியும்?"       என்கிறார் வாத்தியார்...   
'மக்கள் திலகம்' என்று எதனால் அவரை அழைக்கிறார்கள்  என்று புரிந்து கொள்ள முடிகிறதா? 
'தங்கத்தோணியிலே' பாடலுக்கு  கடலில் பெரும் படகில் நின்றபடி  பாடிக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் தலைக்கு மேலும், குறிப்பிட்ட  இசை டைய்ங் என்று வரும்போது  எம்ஜிஆரின் இருகால்களுக்கு  இடையில்  முழு விமானம்  நகரும்போது  தியேட்டரில் ரசிகர்களின் உற்சாகப் பீறிடல் விசிலும், கைதட்டலும், சொல்லிமாளாது.
அதற்காக வாத்தியார் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. கடலோரமாக அந்த விமானங்கள் இறங்கும் ஏறும் நேரங்களைக் குறித்துக் கொண்டு இந்த நேரத்தில் இந்த வரி இசைக்கான படப்பிடிப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்க அனுமதியில் இருந்து, ஆதவனின் அனுமதிவரை கிடைக்கவேண்டும்.
அந்த கால்களுக்கிடையே  முழு விமானம் நகர தூரக்கணக்கிட்டு, நேரக் கணக்கிட்டு,  காமரா ஆங்கிளுக்குள் இடம் பெற எவ்வளவு மெனக் கிட்டு இருப்பார். 
பாடல் காட்சி என்னவோ நான்கு நிமிடங்களுக்குள்தான். இந்தக் காட்சிக்காக தயாரிப்பாளர் எம்ஜிஆர் செலவு செய்ய, இயக்குநர் எம்ஜிஆர் காமரா ஆங்கிளில் அடங்கினதை,  அடங்காததை எடிட்டிங்கில் சரி செய்ய, நடிகர் எம்ஜிஆர் அந்தக் கால்களை எப்படி வைத்தால் சரியாக இருக்கும் என்று முடிவுசெய்து நிற்க வேண்டும் எவ்வ ளவு மெனக்கிடல்கள்.         
அதே போல 'அவள் ஒரு நவரச நாடகம்'  பாடல் காட்சிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமலிருந்தாலும் அது கனவுக் 
  காட்சியாய் அமைந்து, கனவுக்காட்சிக்கு லாஜிக் வேண்டாம் என்பதாலும், பாடல் 
பால சுப்ர மணியம் குரலில் அற்புதமான மெட்டில் அமைந்து விட்டதாலும் இந்தப்பாடல் மனதில் பதிந்து விட்டது.   
அந்தக் காலக்கட்டத்தில் தண்ணீருக்கு அடியில் அல்லது தண்ணீருக்குள் படமெடுக்கும் காமரா வசதி இல்லை.      இந்தப்பாடல் இப்படி எடுக்கப்பட வேண்டும் என்றுதீர்மானித்தபின் மிகப்பெரிய நீர்த்தொட்டிக்குள் லதாவையும் வாத்தியாரையும் நீந்த விட்டு, தொட்டிக்கு வெளியிலிருந்து எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.    

(இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் கோட்டை மேலிருந்து கடலில் 
 குதித்த ஜெமினி குதித்த உடன் கடலுக் கடியில் போகும் காட்சியை வாசனின் ஆஸ்தான காமராமேன் எல்லப்பா மிக அருமையாக எடுத்திருப்பார்.  )          
சென்னைக்கு வெளியே,  பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டி செய்யப்பட்டு  30× 20 என்று வைத்துக் கொள் ளுங்களேன் எனக்கு சரியாகத் தெரியவில்லை.    மூன்று தொட்டிகள், முழுக்கத் தண்ணீர் ரொப்பபட்டு ஒரு வாரம் கழித்து அதை பார்வையிடச்சென்றார் எம்ஜி ஆர். ஒரு தொட்டி போதாதா எதற்கு மூன்று தொட்டிகள் என்று நினைத்தவர்களுக்கு
 பதில் கிடைத்தது. முழுக்க வழிய வழிய நீர் நிரப்பபட்ட தொட்டிகளில் நீரின் அழுத்தம் தாங்காமல்,  இரண்டு கண்ணாடிகள் சேரும் இடத்தில்  ஒட்டப்பட்டதில்  விரிசல் ஏற்பட்டு லீக் ஆகிக்கொண் டிருந்தது . இன்னொருதொட்டி "பட்"
நம் வீட்டு மீன்தொட்டியிலேயே சில சமயங்களில் நாம் இப்படிப் பார்த்திருக்கலாம். 
ஒன்றே ஒன்றை தயார் செய்து இப்படி ஆகியிருந்தால்? வாத்தியாரின்  தீர்க்க தரிசனம் அபரிமிதமானது என்பதில் சந்தேகம் உண்டோ?

 

Saptharishi Lasara
 

Leave a comment

Comment