TamilsGuide

வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப் பார்ப்பாகும் -அநுர

”வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  மக்கள் எதிர்பார்ப்பு ஈடேருகின்ற நாடாளுமன்றமொன்றை நியமிக்க வேண்டும்.

நாங்கள் சட்டவாக்க அதிகாரம் உரியவகையில் பிரதிபலிக்கப்படுகின்ற நாடாளுமன்றமாக மாற்றியமைப்போம்.

நிறைவேற்று அதிகாரம் மாற்றப்படவேண்டும். தனியார் ஒருவரிடம் மட்டற்ற அதிகாரம் குவிந்திருக்கின்றது. இருக்கின்ற சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கி தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும்.

ஊழல், மோசடி, விரயத்தை தடுப்பதற்கான பல சட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம். நாடாளுமன்றத்தையும் நிறைவேற்றுத்துறையையும் நீதித்துறையையும் திட்டவட்டமான சமூக தேவைகளுக்கான பணியாற்றி வருகின்ற நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும்.எமது பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்றை அடையவேண்டும்.

பொருளாதார மாற்றத்திற்காக எமக்கு தொழில்சார் உழைப்பு அவசியமாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் டீசல் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை அதிகரித்துக்கொண்டார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அந்த ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளவில்லை. எமது ஆட்சியில் வரிகளை கட்டாயமாக குறைப்போம்” இவ்வாறு அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment