TamilsGuide

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன

19வது அரசியலமைப்பை உருவாக்கிய ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவினால் தவறு நடந்துள்ளதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மீண்டும் பதிலளித்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, அந்த சரத்துக்களை நீக்க நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்க, 19வது அரசியலமைப்புத் திருத்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய சரத்துக்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் ரணில் விக்கிரமசிங்க ஏன் அவ்வாறு செயற்படுகின்றார் என்றும் தற்போது வேறு கருத்து வெளியிடுகின்றார் என்றும் புரியவில்லை எனவும் ஜயம்பதி விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment