TamilsGuide

உலகநாயகன் குரல் கொடுத்தால் உலகமே கேட்கும் - தக் லைஃப் புது அப்டேட்

இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

முன்னதாக இருவர் கூட்டணியில் உருவாகி வெளியான "நாயகன்" திரைப்படம் தமிழ் திரையுலகில் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சமீபத்தில் இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சிம்பு இந்த படத்திற்கு டப்பிங் செய்வதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்திற்கு கமல்ஹாசன் டப்பிங் செய்வதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

Leave a comment

Comment