TamilsGuide

செப்டெம்பர் 21 - நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் சஜித்

நாட்டில் ஊழல் ஆட்சிக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் விவசாய மாநாடு மொனறாகலையில் பகுதியில் இன்று(28) இடம்பெற்றது.

இதில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,

“தற்போதைய இடைக்கால ஜனாதிபதி எப்படியாவது நாட்டில் மீண்டும் ஆட்சியமைக்கவே முயற்சிக்கின்றார்.

அதாவது அவரது பதவியை தக்க வைக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றார்.

இடைக்கால ஜனாதிபதிக்கும் அவரது சகாக்களான பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கும் நாம் ஒரு விடயத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

அதாவது இந்த நாட்டின் நீதித்துறையை சவாலுக்கு உட்படுத்த முடியாது.

அரசியலமைப்பை மீறி செயற்படும் தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தில் 220 இலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது கள்வர்கள் அனைவரும் ஒன்றிணைந்து டீல் அரசியலில் உள்ளனர்.

சஜித் பிரேமதசாவை தோற்கடிப்பதற்காகவே இன்று கள்வர்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நாம் எந்தவொரு காலகட்டத்திலும் டீல் அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல.

ஆட்சியையும் பதவியையும் தக்கவைத்து கொள்வதற்காகவே இன்று பொருளாதார கொள்ளையர் கூட்டம் டீல் அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment