TamilsGuide

அரசியலமைப்புப் பேரவையின் தீா்மானத்தினை உயா்நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது – பிரதமா்

அரசியலமைப்பிற்கிணங்க அரசியலமைப்புப் பேரவையின் தீா்மானத்தினை உயா்நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார்.

எனவே பொலிஸ்மா அதிபா் விவகாரத்தில் பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து தென்னக்கோன் வகிக்கிறார்.அதில் மாற்றமில்லை. ஜனாதிபதி நினைத்தபடி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது.பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. நாடாளுமன்றம் தான் அரசியலமைப்பு சபைக்கு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது என அவா் மேலும் தொிவித்துள்ளாா்.
 

Leave a comment

Comment