TamilsGuide

பயிற்சியின் போது காயம் - போட்டியில் இருந்து விலகினார் நுவன் துஷார

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார விலகியுள்ளார்.

பல்லேகலையில் இடம்பெற்ற பயிற்சியின் போது, அவரது  விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, நுவன் துஷார இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுசங்க இலங்கை குழாமில் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment

Comment