TamilsGuide

அந்த செயின் வீட்ல இருந்து வெளிய வந்துருச்சு - மிரட்டும் டிமான்டி காலனி 2 ரிலீஸ் டிரைலர்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்தார்.

இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு இன்று காலை அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிரைலர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment