TamilsGuide

தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணம் - அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அதிபர் ஜோ பைடன், சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாகவும், அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த அதிபர் பைடன், தேர்தலில் இருந்து விலகிய பிறகு, நேற்று முதல்முறையாக தொலைகாட்சியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது, எத்தனை பெரிய பதவிகளை விட மிகமுக்கியமான ஒன்று. புதிய தலைமுறையிடம் ஜோதியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்."

"இது தான் நம் நாட்டை ஒருங்கிணைக்கும் தலைசிறந்த வழி. அடுத்த ஆறு மாத காலம், அதிபராக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழு கவனம் செலுத்துவேன்," என்று தெரிவித்தார்.

Leave a comment

Comment