TamilsGuide

தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக மதிப்பிடப்பட்ட நிதி தொடர்பாக 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ள அதேவேளை அதன் அறிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கிடைத்துள்ள அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி செலவு மதிப்பீடு தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment