TamilsGuide

மாத்தளை பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் பற்றாக்குறை காரணமாக அங்கு பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலக மண்டபத்தில் அவசர கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது

இதில் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்களுக்கு தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த வைத்தியசாலை ஆரம்ப வைத்தியசாலையாக இருந்ததாகவும், அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை மாவட்ட வைத்தியசாலை பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த வைத்தியசாலைக்கு சுமார் 400 தாதியர்கள் தேவைப்படுவதாகவும், எனினும், தற்போது சுமார் 280 தாதியர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாகவும் இளநிலை ஊழியர்கள் பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment