TamilsGuide

சுதந்திரம் பார்க்க எப்படி இருக்கும் தெரியுமா? ஜூலியன் அசாஞ்சேவின் விடுதலைப் புகைப்படம் வைரல்

அமெரிக்க ராணுவத்தின் முறைகேடுகளையும் ரகசியங்களையும் தனது விக்கிலீக்ஸ் நிறுவனம் மூலம் அம்பலப்படுத்தியதற்காக கடந்த 2010 முதல் 14 ஆண்டுகள் தாய்நாட்டையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து சிறைகளில் வாழ்ந்தவர் 53 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே . லண்டன் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தின் முன் ஆஜரான நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே போதுமான சிறைவாசத்தை அசாஞ்சே லண்டனில் அனுபவித்த நிலையில் சுதந்திர மனிதனாக அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து வெளியில் நடந்து வந்தார். அசாஞ்சேவுக்கு உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். அனைத்து சர்ச்சைகளும் முடிந்து தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு அசாஞ்சே உடனடியாக திரும்பிச் சென்றார்.

விடுதலைக்குப் பின் அசாஞ்சே என்ன செய்கிறார் என்ற தகவல் ஏதும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் கடற்கரையில் இருக்கும் வெகேஷன் புகைப்படங்களை பகிர்த்துள்ளார்.

முன்னதாக லண்டன் சிறையில் இருந்தபோது அசாஞ்சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் விடுதலையாகி வந்த பிறகு ஒவ்வொரு நாளும் கடலில் நீந்தி ஆனந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிந்ததாக அறிய முயந்தது. அதை நினைவாக்கும் விதமாகவே தனது சுதந்திரத்தை அசாஞ்சே கொண்டாடி வருகிறார். 
 

Leave a comment

Comment