TamilsGuide

ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான யோசனைகளை கோர ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதியின் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மற்றும் அனைத்து முன்மொழிவுகளின் மென் நகலையும் PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09-08 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம் என்று ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Comment